இளம் வயதில் தவிர்க்க வேண்டிய நிதி தவறுகள்!

இளம் வயதிலேயே நிதி திட்டமிடலை மேற்கொள்வதோடு, நிதி தவறுகளையும் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில், நிதி தவறுகள் பாதிப்பை ஏற்படுத்தி, நிதி பயணத்தை சிக்கலாக்கும்.

பொதுவாக செய்யப்படும் நிதி தவறுகளை தவிர்ப்பதன் மூலம், வலுவான நிதி அடித்தளத்தை அமைத்துக்கொள்ளலாம். எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு இது உதவும்.

செலவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது துவங்கி, அதிக வட்டி கடன்கள் சேர்வதை தவிர்ப்பது வரை பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி இளம்வயதில் தவிர்க்க வேண்டிய நிதி தவறுகளை பார்க்கலாம்.

வாழ்வியல் தேவைகள்... வாழ்வியல் தேவைகளில் கவனம் செலுத்துவதற்கு முன், போதிய சேமிப்பு, முறையான முதலீடு, காப்பீடு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; ஓய்வு காலத்தில் வளமாக இருக்கலாம்.

அதிக வட்டி கடன்... அதிக வட்டி கொண்ட தனிநபர் கடன், கிரெடிட் கடன் போன்றவை சரியாக கையாளவில்லை என்றால், பாதிப்பை ஏற்படுத்துபவை. இவற்றை தவிர்ப்பது நல்லது.

செலவு கணக்கு... வருமானம் அதிகமோ, குறைவோ, வருமானத்திற்கு ஏற்ற செலவு இருக்க வேண்டும். எனவே, மாதாந்திர பட்ஜெட்டை திட்டமிட்டு, அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும்.

அவசரகால நிதி... பணியில் சேர்ந்ததுமே, பல வித இலக்குகளும், அவற்றுக்கேற்ற செலவுகளும் இருக்கும் என்றாலும், எதிர்பாராத செலவுகளுக்காக சேமிக்க வேண்டும். இது அவசர கால நிதியாகும்.

ஓய்வுகால திட்டமிடல்... சம்பாதிக்கத் துவங்கியதுமே, சேமிப்பிலும், முதலீட்டிலும் கவனம் செலுத்துவதோடு, ஓய்வு கால திட்டமிடலையும் துவக்க வேண்டும். அப்போது தான் கூட்டு வட்டியின் பலனை பெற முடியும்.