கழுத்து கருமையாக உள்ளதா? அப்போ இத ட்ரை பண்ணுங்க..

பேஷியல், மசாஜ் என முக பளபளப்புக்கு காட்டும் அக்கறையை பலரும், கழுத்தில் காட்ட தவறிவிடுகிறோம். இதனால், கழுத்தில் பலருக்கும் சருமம் கருமையாக மாறிவிடுகிறது. இதை போக்க எளிய டிப்ஸ்...

உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து சருமத்தை வெண்மையாக மாற்ற உதவுகிறது. இதன் சாறை எடுத்து கழுத்தின் கருமையான பகுதிகளில் தடவி, 10 - 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவவும்.

சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கையான நொதிகள் தயிரில் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவுவதால், இதை உலர வைத்து பொடி செய்து, சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இயற்கையாகவே உங்கள் நிறத்தை மேம்படுத்தும். இதன் ஜெல்லை கழுத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்த பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வெள்ளரிக்காய் உதவும். எனவே வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறை சம அளவில் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.