வண்ணவண்ண வட்டங்களால் பிரமிக்கவைக்கும் ஏரி..!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஓசோயோஸ் பள்ளத்தாக்கில் கில்குக் ஏரி அமைந்துள்ளது.
கோடை காலத்தில் வெப்பம் காரணமாக இந்த ஏரியின் நீர் ஆவியாகி, நீர் தேங்கி வட்ட வடிவிலான அமைப்புகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு உருவாகும் 365 வட்ட வடிவ அமைப்புகள் ஒவ்வொன்றிலும் தனித்துவமான ரசாயனக் கலவைகள் உள்ளன.
கனிமங்களின் கலவையைப் பொறுத்து ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு நிறத்தில் வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.
நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும்போது இந்த ஏரியைக் கண்டு ரசிக்கலாம். இந்த இயற்கை அதிசயத்தைப் பார்ப்பதற்காக வாகன ஓட்டிகள் வழியிலேயே நின்றுவிடுவர்.
இந்தப் புள்ளிகளில் மெக்னீசியம் சல்பேட், சோடியம் சல்பேட், கால்சியம், வெள்ளி, டைட்டானியம் உள்ளிட்டவை உருவாகி உலகிலேயே கனிமங்கள் அதிகம் நிறைந்த ஏரியாக உள்ளது.
இந்த ஏரியில் அதிகளவு மெக்னீசியம் சல்பேட் உள்ளதால் கோடை காலத்தில் அது கடினமாகி, ஏரியில் உள்ள வட்டவடிவ அமைப்புகளைச் சுற்றி இயற்கையான நடைபாதைகளை உருவாக்குகிறது.