வறண்ட உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற சில டிப்ஸ்...
உதடுகள் மிகவும் வறண்டிருந்தால், வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து எளிதில் தீர்வு காணலாம்.
சர்க்கரை, தேனை சரியான அளவு எடுத்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக உங்கள் உதடுகளில் தேய்த்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.
கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவுவது இறந்த செல்களை அகற்றி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.
தேங்காய் எண்ணெய்யை உங்களுடைய உதடுகளில் தொடர்ந்து தடவி வாருங்கள். இதனால் வெடிப்பு ஏற்படுவது குறைந்து, உதடுகள் இயல்புநிலையை அடையும்.
மில்க் க்ரீமில் உ்ளள அதிகப்படியான கொழுப்பு அமிலங்கள் உதட்டை அதிக மென்மையானதாக மாற்றும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உதட்டிற்கு தேவையான நீர்ச்சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.
தினமும் குறைந்தபட்சம் எட்டு க்ளாஸ் நீர் அருந்துங்கள். இதன் மூலம் உங்கள் உதடுகள் வறண்டு போகாது.