இன்று சர்வதேச மாணவர்கள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவ., 17ல் சர்வதேச மாணவர்கள் தினம் அன்று கொண்டாடப்படுகிறது.

இத்தினம், 1939ல் நாஜிப் படையினரால் ப்ராக் பல்கலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் பங்களிப்பை நினைவு கூற வலியுறுத்துகிறது.

1941ம் ஆண்டில் தான் முதன்முதலில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.

50 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் லண்டனில் நடைபெற்ற சர்வதேச மாணவர் கவுன்சிலால் இந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நாளில் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் கவுரவிக்கப்படும்.

மாணவர் சமுதாயத்திற்கான பிரச்னைகளை ஆய்வு செய்தல் மற்றும் தீர்வுகளைக் கொண்டு வருவது இந்நாளின் நோக்கம்.

மேலும் கல்வி உரிமை, கருத்துச் சுதந்திரம், மற்றும் அநீதியை எதிர்த்துப் போராடும் இளைஞர்களின் வலிமையை உலகிற்கு நினைவூட்ட இத்தினம் உதவுகி்றது.