புதுப்பிக்கப்பட்ட மொபைல் வாங்குவோர் கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்..!
ரீபர்பிஸ்டு ஸ்மார்ட்போன் என்பது பயன்படுத்திய போனை, அதன் பழைய நிலைக்கு கொண்டு வந்து, குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது ஆகும்.
பழைய ஸ்மார்ட்போன், நீண்ட காலம் பயன்படுத்திய பின்னர், அதனை குறைந்த விலைக்கு விற்பதாகும்.
இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
ஆன்லைன் ரிவியூ, விற்பனையாளருக்கு வாடிக்கையாளர்கள் அளித்துள்ள ரேட்டிங் போன்றவற்றை ஆய்வு செய்து வாங்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்யாதபட்சத்தில், வாரண்டி பொருந்துமா என கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் தொடுதிரை, கேமரா மற்றும் சார்ஜ் பாயிண்ட் சரியாக வேலை செய்கிறதா என பார்க்க வேண்டும்.
விற்பனையாளரிடம், பேட்டரி ,போனுடன் வந்த ஒரிஜினல் பேட்டரியா அல்லது வேறு பேட்டரி ஏதேனும் மாற்றப்பட்டுள்ளதா என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போனுடன், வரும் சார்ஜர், இயர்போன் மற்றும் பயனர் கையேடு போன்றவை ஒரிஜினலா என்பதை பாருங்கள்.
புதிய போன் விலைக்கும், புதுப்பிக்கப்பட்ட போன் விலைக்கும் வித்தியாசம் குறைவாக இருந்தால், புதுப்பிக்கப்பட்ட போன் வாங்குவதை தவிர்க்கலாம்.