இந்தியாவில் பார்க்க வேண்டிய அழகிய கோவில்கள் சில !
தமிழகத்தின் மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் திராவிட கட்டடக்கலைக்கு உதாரணமாக உள்ளது. நுணுக்கமாக செதுக்கப்பட்ட கோபுரங்கள், மண்டபங்கள், சிற்பங்கள் வெகுவாக கவர்கின்றன.
சிதம்பரம் நடராஜர் கோவில்... பழமையான இந்த கோவில் சிவனின் உருவமற்ற அம்சத்தை குறிக்கும்; தனித்துவமான சிதம்பர ரகசியம் அதன் கட்டடக்கலை சிறப்பை உள்ளடக்கியது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான, கோனார்க் சூரியன் கோவிலில், பிரம்மாண்டமான தேர் வடிவம், வாழ்க்கை மற்றும் புராணங்களை சித்தரிக்கும் சிக்கலான கல் சிற்பங்கள் பிரமிக்க வைக்கிறது.
பொற்கோயில், அமிர்தசரஸ்... இது சீக்கிய மதத்தின் புனிதமான கோயில். சமத்துவம், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை குறிக்கும் ஒரு கட்டிடக்கலை அற்புதமாக உள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ கோயில்கள் மனித வாழ்க்கையையும், அன்பையும் கொண்டாடும் சிற்றின்ப மற்றும் கலை சிற்பங்களுக்காக புகழ் பெற்றவை.
இமயமலையின் பனி மூடிய சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கேதார்நாத் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான இந்து கோவில்களில் ஒன்றாகும்.
ராமேஸ்வரம் என்ற அழகிய தீவில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயில் அதன் கட்டடக்கலை அம்சத்துக்காக திரும்பிப் பார்க்க வைக்கிறது.
தமிழ் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னத்தின் பட்டியலில் ஒன்றாக உள்ளது.
நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்கள், பசுமையான தோட்டங்கள், வசீகரிக்கும் இசை நீரூற்று நிகழ்ச்சிகள் என கவர்கிறது டில்லியிலுள்ள அக்ஷர்தாம் கோவில்.