உலகின் நீண்டகால ராணி இரண்டாம் எலிசபெத்; இவர் 1926 ஏப்.21ல் பிறந்தார்.

1953 ஜூன் 2ல் பிரிட்டன் ராணியாக முடி சூடினார். 1947 நவ., 20ல் டென்மார்க் இளவரசர் பிலிப்பை, எலிசபெத் ராணி திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு சார்லஸ் (இவர் தான் அடுத்த மன்னர்), ஆன்ட்ரூ, எட்வர்டு ஆகிய மூன்று மகன்களும், அன்னே என்ற ஒரு மகளும் உள்ளனர்.

உலகில் நீண்டகாலம் (70 ஆண்டு, 214 நாட்கள்) அரச பதவி வகித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார்.

எலிசபெத் ஆட்சியில் 1997ல் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்ததுடன் பிரிட்டனின் ஏகாதிபத்திய சகாப்தம் முற்றுப் பெற்றது.

இவரது மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் - டயானா திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இது ராணி எலிசபெத்துக்கு வேதனையளித்த விஷயம்.

இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி பிரிட்டன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிதும் இவரை வருத்தத்துக்கு உள்ளாக்கியது.

இந்தியாவிற்கு 1961, 1983, 1997 என மூன்று முறை வருகை தந்துள்ளார். 1997ல் வருகை தந்த போது நடிகர் கமலின் மருதநாயகம் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

2021 ஏப்.9ல் கணவர் பிலிப் மறைந்தார்; 2022 செப். 8ல் உடல்நலக்குறைவால் எலிசபெத் ராணி மறைந்தார்.