எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு... சொல்கிறார் ரவீந்திரநாத் தாகூர்
உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடப்பதாக எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும்.
பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழ வைக்கும். பொறாமை, முரட்டுச்சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் நம்மை எதற்கும் தகுதியற்றவர்களாக்கி விடும்.
எப்போது பிரச்னை என ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறையும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால் தேவையற்ற மன வருத்தம் உண்டாவதில்லை.
லட்சியம் நிறைவேற வேண்டுமே என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும். அந்த லட்சியத்தை நோக்கி நம் முயற்சிகள் இருக்கும்.
மனதை எப்போதும் எளிமையாகவும், தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க விரும்புங்கள். மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால், நம் மனதை ஆளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு நேய உணர்வு அவசியம். மரம் பழங்களை தருவதை போன்று, ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் பயனில்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்தே உள்ளம் மகிழ்ச்சியடைவர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல; மனம் சார்ந்ததே.