"ஹலோ” ஒரு ஆனந்தத்தின் ஆரம்பம்...: இன்று உலக ஹலோ தினம்
ஹலோ என்பது அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லின் காதலியான ஹலோ தான். உண்மையில் காதலுக்கு முதன் முதலில் மரியாதை செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தான்.
இவருடை காதலியான மார்கரேட் ஹலோ கொடுத்த ஊக்கம் மற்றும் உற்சாகத்தினால் தான் டெலிபோன் சாதனத்தை கண்டுபிடித்தார்.
தன்னுடைய தொடர்ச்சியான அயராத உழைப்பினால் 1874ஆம் ஆண்டு டெலிபோனை கண்டுபிடித்தார்.
தன்னுடைய கண்டுபிடிப்பை வர்த்தகப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டினார். தான் கண்டுபிடித்த சாதனத்தை பல்வேறு தரப்பினர் முன்பும் செயல் விளக்கம் செய்து காட்டினார்.
இறுதியில், இங்கிலாந்து ராணி விக்டோரியா மஹாராணி முன்பாக டெலிபோனை உபயோகிக்கும் முறையை செய்து காட்டினார்.
அந்த செயல் விளக்கத்தின் போது, அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் அவர் முதலில் உச்சரித்தது ஹலோ என்ற வார்த்தை தான்.
எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக ஹலோ தினமான இன்று நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் ஹலோ என்று அன்பாக சொல்லி பேசுவோம்.