துாக்கம் தரும் யோகா
'யோகா' உடலுக்கும், மனதுக்கும் நன்மையளிக்கிறது.
இந்நிலையில் யோகா பயிற்சியால் துாக்கப் பிரச்னையை சரி செய்யலாம்.
பல நாடுகளை சேர்ந்த 2500 பேரிடம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டதாக சீனாவின் ஹார்பின் விளையாட்டு பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.
வாரத்துக்கு இருமுறை மட்டும், 30 நிமிடத்துக்கு குறைவான நேரத்துக்கு தீவிர யோகா பயிற்சி செய்வது, துாக்கத்தின் தரத்தை மேம்படுவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது நடைப்பயிற்சி, ஓட்டம், ஜம்பிங், நீச்சல் மற்றும்
சைக்கிளிங் உள்ளிட்ட மற்ற உடற்பயிற்சிகளை விட துாக்கத்தின் தரத்தை
மேம்படுத்துவதில் பயனுள்ளதாக உள்ளது.
8 - 10 வாரத்தில் இந்த இலக்கை எட்டலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.