இன்று சர்வதேச இடம்பெயர்வோர் தினம்!!
உலக அளவில் ஆண்டுதோறும் டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முறையாக இடம் பெயர்ந்தவர்களுக்கு உரிய மனித உரிமைகள் வழங்கவும், சமூக, பொருளாதார, கலாச்சாரத்தில் அவர்களும் முன்னேற வழிமுறைகளை அந்தந்த நாடுகள் செயல்படுத்த வலியுறுத்தப்படுகிறது.
உலகளவில் இடம்பெயர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, 2000ம் ஆண்டு ஐ.நா., சபையால் இத்தினம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், திருமணமான பெண்கள், சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர்கின்றனர். வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர்களும் இடம்பெயர்கின்றனர்.
இடம் பெயர்பவர்கள் தங்களுக்கு போட்டியாக இருக்கின்றனர் என ஏற்கனவே அங்குள்ளவர்கள் கருதக்கூடாது.
மேலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் அவர்களது வாழ்க்கையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை ஒவ்வொரு அரசும் செயல்படுத்த முன்வரவேண்டும்.