அலையாத்திக் காடுகள் கொண்ட சொர்க்க பூமி... பிச்சாவரம்
வங்கக் கடலை ஒட்டிய கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் உள்ளது.
தில்லை மரங்கள் இங்கு அதிகம் உள்ளன. மேலும் அலையாத்திக் காடுகள், சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
பிரேசில் நாட்டிற்கு பிறகு இங்குள்ள அலையாத்திக் காடு தான் உலகின் இரண்டாவது பெரியது எனக் குறிப்பிடப்படுகிறது.
3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் காடுகள், அதன் நடுவே 4 ஆயிரத்து 400 சிறுசிறு கால்வாய் திட்டுக்கள், பல்வகை மூலிகைத் தாவரங்கள் இங்கு உள்ளன.
மேலும் இங்கு பல்வேறு இடங்களில் இருந்து 177 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
படகு குழாமின் முன்பு சிறுவர் விளையாட்டு பூங்கா, உயர் கோபுரம், தங்கும் விடுதி உள்ளிட்டவைகள் உள்ளன.
கட்டணம் முறையில் மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே படகுச் சவாரிக்கு அனுமதி உண்டு.
பேராண்மை, தசாவதாரம், துப்பறிவாளன் என பல சினிமா ஷூட்டிங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
கடல் முகத்துவாரத்துல இருக்கற இந்த அற்புதக் காடுகளில் படகில் உலா வந்து, நாமும் ஒரு அலாதியான அனுபத்தை பெறலாம்.