இன்று புத்தக ஆர்வலர்கள் தினம்! ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று புத்தக ஆர்வலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
மக்கள் டிவி, ஸ்மார்ட்போன்களை தவிர்த்து படிக்க ஒரு புத்தகத்தை கையில் எடுக்க வைக்கும் நோக்கத்தில் இத்தினம் உருவாக்கப்பட்டது.
பலர் படிப்பை, பள்ளிப்படிப்பு, கல்லுாரிப்படிப்பு என்றே எண்ணுகிறார்கள். படிப்பது அதை எல்லாம் கடந்தது.
இலக்கியம், சரித்திரம், விஞ்ஞானம், பூகோளம் என இப்படி எதில் மீது ஆர்வம் உள்ளதோ அதில் பிடித்ததை அதிகம் படிக்கலாம்.
பிப்லியோதெரபி அல்லது புத்தக தெரபி என்பது மக்கள் தங்கள் பிரச்னைகளை சமாளிக்க புத்தகங்களைப் பயன்படுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும்.
மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க இது பயன்படுகிறது.
30 நிமிடங்களுக்கு புத்தகங்களை வாசிப்பதால், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் மனக்கவலைகள் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இணைந்து குழந்தைப் பருவத்தில் துவங்கி பள்ளி பருவத்திலும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் குழந்தைகளிடம் வாசிப்புத்திறன் அதிகரிக்கக்கூடும்
நேர்மறையான புத்தகங்களை வாசிக்க முயற்சிக்கும் போது, நாள் முழுவதும் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க உதவும்.