இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்!

உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, சட்டவிரோத போதைப் பொருள் வியாபாரம் உள்ளது.

ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ல் சர்வதேச போதைப்பொருள், சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது.

'இணைப்பை துண்டித்தல்: அனைவருக்கும் தடுப்பு, சிகிச்சை, மீட்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

நம் நாட்டில், 15 முதல், 64 வயதுக்கு உட்பட்டவர்களில், 17 பேரில், ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்கிறது. ஐ.நா., சபை.

போதை மீட்பு சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் உளவியல் ஆலோசனை பெற, 14416 அல்லது 104 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.