இன்று உலக காற்று தினம்

அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ காற்று அவசியம். காற்றுமாசுவை தடுக்க வலியுறுத்தி ஜூன் 15ல் உலக காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்கள், ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களின் பயன்பாட்டால் காற்று மாசுபடுகிறது. இதனால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

மனிதன் உணவு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது.

மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியமானதாகும்.

காற்றானது, தாவரத்தின் விதைகளை சிதறடிப்பதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதோடு, பூமியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது.

புவி வெப்பமடைதல் பிரச்சினையை உலகம் சந்திக்கும் இந்த வேளையில், காற்றைப் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை உபயோகிப்பது மிகவும் நன்மை பயக்கும்.