மிரட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க இதோ டிப்ஸ்

கோடை வெயில் வாட்டிவருவதால், வெளியே செல்லும்போது குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்தவேண்டும்.

மதியம், 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.

காலை, மாலை வேளைகளில் ஏ.சி.,யை தவிர்த்து, ஜன்னல், கதவுகளை திறந்து, காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.

நீர்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் (250 மி.லி) வீதம், நாளொன்றுக்கு 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும்.

எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.