பெண்களின் ஆல்வேஸ் பேவரைட் முத்து நகைகள்!

பாரம்பரிய நகைவகைளில் முத்து அணிகலன்களுக்கு சிறப்பு இடம் எப்போதும் உண்டு.

நவீன உலகில் எவ்வளவு நாகரிக மாற்றத்தை பேஷன் உலகம் கண்டாலும், முத்து ஆபரணங்களின் மவுசு இப்போதும் குறைவதில்லை.

முத்து நகைகள் அணிவதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதனால் உடலில் படும்படி முத்துக்களை அணிய வேண்டும்.

நேரடி சூரிய ஒளி, வெப்பம் இவற்றுக்கு அருகே முத்துக்களை அணிந்து இருக்கக் கூடாது. காற்றோட்டமான பாதுகாப்பான இடத்தில் முத்து நகைகளை வைக்க வேண்டும்.

முத்து நகைகளை அணியும் போது பெர்ஃப்யூம், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

முத்து நகைகள் அணிந்த பிறகு அதில் வியர்வை இருக்கும் என்பதால் அதை திரும்ப எடுத்து வைக்கும்போதும் மென்மையான பட்டுத் துணியால் துடைத்துவிட்டு வைக்க வேண்டும்.

முத்துக்களை மற்ற அணிகலன்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது. மேலும் முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் பார்த்துக் கொள்ளவும்.

முத்துகள் பதித்த நகைகளை நீரில் மூழ்கவைத்து கழுவக்கூடாது. அதேபோல் சூடு நீரில் கழுவினால் முத்துகள் ஒளியிழக்கும். அதனால் இவற்றை தவிர்க்கவும்.

பிளாஸ்டிக் முத்துகளும் சந்தையில் கிடைகின்றன அதனால் அவற்றை பார்த்து வாங்க வேண்டும். ஒரிஜினலுக்கும் போலிக்கும் பார்க்கும் போது வித்தியாசம் தெரியாது.