இன்று பரிணாம தத்துவத்தை உலகிற்கு தந்த சார்லஸ் டார்வின் தினம்!

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் பிறந்தநாள் (பிப். 12) உலக டார்வின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் அறிவியல் துறைக்கு சார்லஸ் டார்வினின் பங்களிப்பை கவுரவிக்கவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1909ல் 167 நாடுகளின் 400 விஞ்ஞானிகள் லண்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் சந்தித்தபோது, இத்தினம் உருவாக்கப்பட்டது.

1809 பிப். 12ல் பிரிட்டனில் பிறந்தார். தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை 1859ல் 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நுாலாக வெளியிட்டார்.

'குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவானான்' என்பதை உலகிற்கு தெரிவித்தார். அவரின் பொன்மொழிகள் சில பார்ப்போம்..

இயற்கையில் உள்ள அனைத்தும் நிலையான விதிகளின் விளைவாகும்.

ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தைப் போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது.

மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர்.