ஹியூமனாய்டு ரோபோ தயாரிக்கும் நாசா..!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஹியூமனாய்டு ரோபோ எனப்படும் மனிதர்கள் போன்று செயல்படும்அதிநவீன ரோபோ ஒன்றை உருவாக்க உள்ளது.
5 அடி, 5.2 அங்குலம் உயரம் கொண்ட, இந்த ரோபோவின் பெயர் அப்போலோ.இது 72 கிலோ எடை கொண்டது.
இந்த ரோபோ, வீட்டில் துணி துவைத்தல் உள்ளிட்ட வேலைகளையும் செய்யும்.
இந்த ரோபோவானது, விண்வெளி வீரர்கள் விண்வெளி ஓடத்தில் செல்லும்போது உடன் சென்று, அவர்களுக்குத் தேவையான சிறு உதவிகளைச் செய்யும்.
வரும் மார்ச் மாதம், இந்த அப்போலோ ரோபோ பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தற்போது அப்போலோ பரிசோதனை நிலையில் இருப்பதால் விண்வெளி வீரர்களின் பொருட்களை சுமந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தால் நாசா மிஷனில் விண்ணுக்குச் சென்ற முதல் ரோபோ என்கிற பெயரை அப்போலோ பெறும்.