உணவு பாதுகாப்பு... ஹோட்டல்களில் இனி கட்டாயம்

உணவு முறை மாற்றத்தால், நீரிழிவு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிற்று புண் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஹோட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்வதே இதற்கு பிரதான காரணமாகும்.

குறிப்பாக, பல ஹோட்டல்களில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மற்றும் காலாவதியான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், ரசாயனம் கலந்த உணவு உள்ளிட்ட பல காரணங்களால், ஹோட்டல் உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹோட்டல்களில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களை பணியமர்த்துவது கட்டாயம் என மாநில உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய, சுகாதாரமற்ற உணவுகளின் விற்பனையை தடுக்க முடியும்.