இன்று உலக ஓசோன் பாதுகாப்பு தினம்! கடவுள் கொடுத்த கவசத்தை காப்போம்!

ஓசோன் என்பது வாயுக்களால் ஆன படலம். பூமியிலிருந்து 20 - 60 கி.மீ., உயரம் வரை பரவி உள்ளது. 20லிருந்து 25 கி.மீ., வரை அடர்த்தியாக பரவியுள்ளது.

சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன.

இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய பணி. மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்கிறது.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது. மேலும் ஏசி, ஏர் கூலர்கள் ஆகியவற்றில் இருந்து வரும் வேதி பொருட்கள் ஓசோனில் துளையை ஏற்படுத்துகிறது.

மேலும் இவை ஓசோனிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு துகளாக மாறுகிறது. இதனால் ஓசோன் படலம் பெரும் அளவில் பாதிக்கிறது.

மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஓசோனை பாதுகாக்கலாம்.

உலக மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 16-ந் தேதியை சர்வதேச ஓசோன் தினமாக அறிவித்தது.