மின்னும் சிரிப்பால் ஈர்க்க பற்களில் ரத்தினம்!
இன்றை டிரெண்டிங்கில் ஒன்றாக பற்களை அழகாக மாற்ற 'டூத் ஜெம்ஸ்' எனப்படும் பல் அலங்காரம் தற்போது பலரையும் ஈர்க்கிறது.
சிரிப்பை மேலும் பிரகாசமாகவும் தனித்துவமாகவும் காட்ட, இந்த புதிய பேஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளிநாடுகளில் ராப் பாடகர்கள், பிரபலங்களிடையே தொடங்கியது இந்த வழக்கம். தங்கம், வைரக்கற்களை பற்களில் பொருத்தி, ஸ்டைலை வெளிப்படுத்தினர்.
இப்போது திருமணம், விழாக்கள், புகைப்பட ஷூட் போன்ற நிகழ்ச்சிகளுக்காக கூட பலர் இந்த பல் அலங்காரத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
சிரிப்பை பிரகாசமானதாக மாற்றும் இந்த சமாச்சாரத்தை பொருத்த கொஞ்ச நேரம் போதும்.
தவறான முறையில் பொருத்தும்போது பல் எனாமல் சேதமடையும் அபாயம் உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் பல் நோய்கள் ஏற்படலாம்.
நீண்ட நாட்கள் வைத்திருந்தால் பல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
ஆகவே நீண்ட காலம் வைத்திருக்காமல் இடைவேளையில் அகற்றுவது நல்லது என பல் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.