சம்மருக்கு ஏற்ற ஆடைகள்!

கோடையில் ஜீன்ஸூக்கு பதிலாக ஜெகின்ஸ் அணியலாம். இது காட்டன் மற்றும் பனியன் துணியில் கிடைக்கிறது. மேலும் ஜீன்ஸை விட ஜெகின்ஸ் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும்.

பார்க்க ஜீன்ஸ் போல தெரியும் பல டிசைன்களிலும், கலரிலும் கிடைக்கிறது. ஜீன்ஸை விட மிக கம்ஃபர்ட்டாக இருக்கும் இது, அனைத்து உடல் வடிவத்துக்கும் ஏற்றது.

கவுன் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. இது குளிர்காலத்தில் மட்டுமல்ல, சம்மரிலும் மிக கச்சிதமாக பொருந்தும். பருத்தி அல்லது ஜார்ஜெட் துணியால் செய்த கவுன்கள் சருமத்தில் வியர்வை சேராமல் பாதுகாக்கும்.

கோடையில் லைட்வெயிட் காட்டன் பைஜாமாக்கள் ஏற்றவை. இந்த மெல்லிய ஆடை இரவில் நல்ல காற்றோட்டத்தை அளித்து வியர்வை தங்காமல் செய்யும்.

லவுன்ஞ்ச்வேர், மென்மையான துணியால் ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடையவை. தடிமனான ஷார்ட்ஸ், டி-ஷர்ட்டுகளுக்கு பதில் பயன்படுத்தலாம்.