மழைக்காலத்தின் வீட்டு பராமரிப்பு டிப்ஸ்!!
சுவருக்கும் சோபா அல்லது கட்டிலுக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும். அப்போதுதான் சுவர்களின் ஈரப்பதம் சோபாவையோ, கட்டிலையோ பாதிக்காது.
மிதியடிகளை அதிகமாக பயன்படுத்துங்கள். அப்போது தான் வீட்டுக்குள் தண்ணீரும், சேறும் சேராது. அதேசமயம் மிதியடிகளை அடிக்கடி தட்டி அல்லது நனைத்து உலர்த்தி காய வையுங்கள்
வேப்பிலைகளை அறையில் வைத்தால், துர்நாற்றம் குறையும். குறிப்பாக அலமாரிகளில் நாளிதழ்களுக்கு கீழே வேப்பிலையை பரப்பி, அதன் மீது துணிகளை வைக்கலாம்
அலமாரிகளில் அவ்வப்போது காற்றோட்டம் இருக்க வேண்டும். நாப்தலின் உருண்டைகளை இவற்றில் வையுங்கள். துர்நாற்றம் குறைவதோடு, கரையான்களின் நடமாட்டமும் குறையும்.
தரையில் கம்பளம் விரித்திருப்பவர்கள், மழை காலத்தில் அவற்றை நீக்கிவிடுவது நல்லது. இல்லையென்றால் ஈரப்பதமும், அழுக்குகளும் அவற்றில் படிந்து துர்நாற்றத்துக்கு வழிவகுக்கும்
மழைக் காலத்தின்போது ஜன்னல்களையும், கதவுகளையும் மூடியே வைத்திருப்போம். இதன் காரணமாக அறைக்குள் ஒருவித நாற்றம் உண்டாகலாம். அவ்வப்போது அவற்றை திறந்து வையுங்கள்.
கதவு, ஜன்னல் போன்றவை ஈரப்பதம் காரணமாக கொஞ்சம் விரிவடையலாம். எனவே, உராயக் கூடிய பகுதிகளில் சிறிது எண்ணெய் அல்லது மெழுகை பூசி வைக்கலாம்