அமைதியே ஆனந்தம்.. அரவிந்தரின் அன்பு சிந்தனைகள்!! இன்று அரவிந்தர் நினைவு தினம்!!

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலையே. அதைக் கற்றுக்கொண்டால் துன்பத்திலும் கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.

ஒழுக்கம் மகிழ்ச்சியின் திறவுகோல். இளமை முதலே மனிதன் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும்.

மன வலிமை, நல்ல புத்தி, மகிழ்ச்சி போன்ற நற்குணங்கள் அமைதியில் இருந்தே உருவாகின்றன.

வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திக்காதே. உன் பங்களிப்பை மட்டும் செய்து கொண்டிரு.

உன்னுடைய நம்பிக்கையை அறிவென்று எண்ணுவது தவறில்லை. ஆனால், பிறர் நம்பிக்கையை மிதிக்காதே.

வெளியில் இருக்கும் பகைவரை விட, பலவீனமான எண்ணங்களே உண்மையில் ஆபத்தானது.

யாரையும் ஏளனம் செய்யாதே. உன்னை நீயே உற்று நோக்கினால் உன்னிடமுள்ள மடமையைக் கண்டு சிரிக்க நேரிடும்.

உன்னுடைய நம்பிக்கையை அறிவென்று எண்ணுவது தவறில்லை. ஆனால், பிறர் நம்பிக்கையை மிதிக்காதே.