இந்த சம்மருக்கு கம்மி பட்ஜெட்டில் ட்ரிப் பிளான் செய்வது எப்படி?
விமானம், கார் உள்ளிட்டவற்றை தவிர்த்துவிட்டு பஸ் அல்லது ரயில் பயணத்தை தேர்வு செய்யும்போது, பட்ஜெட் செலவு கணிசமாக குறையக்கூடும்.
அப்படியே விமானத்தில் பயணிப்பதாக இருந்தால், ஒரு சில மாதங்களுக்கு முன்பே தேதியை முடிவெடுத்து, புக் செய்யும்போது குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆன்லைன் சர்வீஸ் ப்ரொவைடர்களை தேர்ந்தெடுத்து தரமான, மலிவு விலை ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கலாம். முடிந்த வரை ஹோம்ஸ்டேகளை புக் செய்யலாம்; இங்கு தங்குமிடங்கள் மலிவாக கிடைக்கும்.
குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும் முன்பாக நம்பகத்தன்மை வாய்ந்த டூர் ஆபரேட்டர்கள், நண்பர்களை தொடர்பு கொண்டு போக்குவரத்துக்கு கார் அல்லது டாக்ஸிகளை புக் செய்யலாம்.
மலைவாசஸ்தலங்களில் பொது போக்குவரத்தை உபயோகிப்பது செலவை கட்டுப்படுத்தும்.
அந்தந்த பகுதிக்கேற்ற உணவுகள், ஆரோக்கியத்தை அளிப்பதுடன், தரமாகவும், விலையும் கைக்குள் அடங்கும். எனவே, இதுபோன்ற உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும்.