மரங்கள் வீழ்வதைத் தடுப்போம்: இன்று உலக வறட்சிக்கு எதிரான போராட்ட தினம்

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17 ம் தேதி உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மனிதனின் செயல்பாடுகளாலும், பருவநிலை மாற்றத்தாலும் நிலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன.

மேலும், பூமியின் நிலப்பரப்பும் படிப்படியாகப் பாதிக்கப்படுகிறது. மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதைத் தவிர்க்க நாம், சுற்றுச்சூழல் பாதிப்பை முழுவதுமாகத் தடுக்க முயற்சி மேற்கொண்டோமேயானால் இந்த பூமியை பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும்.

காடுகள் அழிப்பைத் தடைசெய்து மரங்கள் வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்.

இதனால் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, மழைக் காலங்களில் மரங்கள் வீழ்வதைத் தடுக்கலாம்.

நிலத்தை ஐக்கியப்படுத்தல், நமது மரபு, நமது எதிர்காலம்... என்பது இந்த வருடத்திற்கான கருப்பொருளாகும். மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்!