உங்களின் புருவத்தை அடர்த்தியாக்க இதோ ஈஸி டிரிக்ஸ்

ஒன்று அல்லது இரண்டு வால்நட்டை எடுத்து, தீபத்தின் தனலில் வைத்து நன்றாக எரிய விடவும்.

பின், அதை ஒரு பவுலில் வைத்து பவுடராக இடிக்கவும்.

இதனுடன் சிறிதளவு வாசலைன், ஒரு வைட்டமின் ஈ மாத்திரை, தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதை ஏர் டைட் பாக்ஸில் சேமித்து வைத்து, தினமும் இரவு தூங்கும் முன் ஒரு காட்டன் பட்ஸ் வாயிலாக சிறிதளவு எடுத்து புருவத்தில் தடவி வர வேண்டும்.

நாளடைவில் அடர்த்தியான, கருமையான அழகிய புருவங்களை பெறலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பதால், இதை புருவத்தில் தடவும் போது அடர்த்தியாக வளர ஊக்குவிக்கிறது.