இந்தியாவில் இயற்கை அதிசயங்கள் நிரம்பிய சுற்றுலா தலங்கள்

உயிருள்ள வேர்ப்பாலம்... மேகாலயாவில் உள்ள சில மரங்கள் 500 ஆண்டுகள் பழமையானவை ஆகும். அங்கு உயிருள்ள மரங்களின் வேர்கள் இணைந்து இயற்கையான பாலத்தை ஏற்படுத்தியுள்ளன.

மஹாராஷ்டிராவில் 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், விண்வெளியில் இருந்து விழுந்த விண்கல் காரணமாக உருவான லோனார் லேக், வட்டவடிவில் காணப்படுகிறது.

லடாக் அடுத்த லே பகுதியில் உள்ள மேக்னடிக் ஹில்லில், புவி ஈர்ப்பு விசை காரணமாக வாகனத்தில், இன்ஜினை ஆப் செய்திருந்தாலும், நியூட்ரலில் இருந்தாலும், மேடான பகுதியை நோக்கி செல்லும்.

மணிப்பூரில் அமைந்துள்ள லோக்டாக் ஏரி, வட்டம், சதுரம் என பல மிதக்கும் தீவு கூட்டங்களுக்கு மிகவும் பெயர் பெற்றது. தெற்காசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகவும் திகழ்கிறது.

ம.பி., ஜபல்பூரில் உள்ள மார்பிள் பள்ளத்தாக்கு, சுற்றுலா விரும்பிகளுக்கு ஏற்றதாகும். பிரமாண்ட பாறைகளுக்கு நடுவே, 3 கி.மீ தூரம் செல்லும் நர்மதா நதியில், படகில் பயணிப்பது சிலிர்ப்பான அனுபவம்.

அலேயா கோஸ்ட் லைட்ஸ்... சுந்தர்பன்ஸ் சதுப்பு நில காடுகளில் இயற்கையாக, மின்னும் வித்தியாசமான ஒளி இங்கு தென்படுகிறது. இரவில் பேய்கள் நடமாடுவதாக மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனம், பருவமழை சமயத்தில் ஏரியாக காட்சியளிக்கும் களிமண் பிரதேசம்; கோடை காலத்தில் உப்பு பாலைவனமாக மாறிவிடும்.