இன்று தேசிய டெங்கு ஒழிப்பு தினம்...

கொசுக்களால் பரவும் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே 16ல் தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

டெங்கு (Den-gee) என்பது ஒரு கிருமி மூலம் பரவும் வைரஸ் நோயாகும். இது ஏடிஸ் ஏஜிப்தி (Aedes Aegypti) என்ற பாதிக்கப்பட்ட பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்த பிறகு கொசு வைரஸை பெற்று, மற்றொரு நபரைக் கடிக்கும்போது டெங்கு ஏற்படுகிறது.

ஏடிஸ் கொசு கடித்த 5-6 நாட்களுக்குப் பிறகு பாதிப்பு ஏற்படத் துவங்கும். அறிகுறிகள் ஏற்பட்டால், அவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.

காய்ச்சல், தலைவலி, குமட்டல், மூட்டு வலி மற்றும் அரிப்பு ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகள்.

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது மூலமாக கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும்.

வீட்டைச் சுற்றி நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் இவற்றில் நீர் தேங்குவதற்கு வாய்ப்பு இருப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.

நிலவேம்புக்குடிநீர், பப்பாளி இலை சாறு போன்றவை இதற்கு மருந்தாக தரப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவற்றைப் பருகலாம்.