போரா... நீளமான இயற்கை குகை இது !

இந்தியாவின் நீளமான இயற்கை குகைகளில் ஒன்று போரா.

இது ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கிலுள்ள ஆனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது.

இது சராசரி கடல் நீர் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் உள்ளது. ஆழம் 260, நீளம் 660 அடி.

லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன் கோஸ்தனி ஆறு உருவாகிய போது இக்குகை தோன்றியது.

குகைக்குள் சிவன், பார்வதி, காளான், முதலை, கோயில் உட்பட இயற்கையில் உருவான வடிவங்கள் உள்ளன.

குகைக்குள் சராசரி வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ்.

அருகிலுள்ள (80 கி.மீ.,) விசாகபட்டினத்தில் விமான, ரயில் நிலையம் உள்ளன.