இன்று உலக பிரெய்லி தினம்

பார்வையற்றோர் விரல்களால் தடவிப்பார்த்து படிப்பதற்கு ஏற்ற 'பிரெய்லி' எழுத்து முறையை லுாயி பிரெய்லி உருவாக்கினார்.

இவரது பிறந்தநாள் (ஜன.,4 ) உலக பிரெய்லி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

லுாயி பிரெய்லி 1809-ல் பிரான்ஸ் நாட்டுல பாரிஸ் நகரத்துக்குப் பக்கத்துல இருக்க ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தார்.

மூன்று வயதில் தையல் ஊசி கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார்.

கல்வி கற்க விரும்பிய இவருக்கு, பார்வையற்றோருக்கான வாலன்டின் ஹேய் எழுத்து முறை கடினமாக இருந்தது.

இதனால், தானே ஒன்று முதல் ஆறு புடைப்பு புள்ளிகளை கொண்டு எழுதும் புதிய முறையை உருவாக்கினார்.

இதற்கு பிரெய்லி முறை என பெயரிடப்பட்டது. இம்முறை, 1820ல் வெளியிடப்பட்டு, 1932ல், சர்வதேச மாநாட்டில் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது.