பிரசவத்துக்காக காப்பீடு எடுக்கலாமா?
கர்ப்பமாகி நான்கைந்து மாதங்கள் ஆகியிருந்தால், பிரசவ காப்பீடு சாத்தியமில்லை.
முன்பு வழக்கமான மருத்துவ காப்பீட்டில், பிரசவத்துக்கான கவரேஜ் கிடைக்க 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
தற்போது பல பிரசவ காப்பீடு திட்டங்களில், 9 மாதங்களிலேயே பிரசவ செலவினங்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் உள்ளன.
மேலும், இந்தக் காப்பீட்டுடன் பல கூடுதல் 'ஆட் ஆன்' அம்சங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதாவது, ரூம் வாடகை உச்சவரம்பு கூடாது, மருத்துவமனையில் வாங்கக்கூடிய ஊசி, விரிப்பு, நாப்கின் உள்ளிட்ட 'கன்சியூமபிள்ஸ்'யும் உள்ளடக்க வேண்டும் என்பது உட்பட பல அம்சங்களையும் முன்கூட்டியே சேர்க்கலாம்.
பல இளம் தாய்மார்கள், கருவுறுவதற்கு முன்பே திட்டமிட்டு, இத்தகைய காப்பீடுகளை வாங்குவது குறிப்பிடத்தக்கது.