குழந்தைகள் எவ்வளவு நேரம் துாங்குவது அவசியம், அதன் முக்கியத்துவம் என்ன?
குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கு துாக்கம் மிக அவசியமானது. இதனால் மனநிலை சந்தோஷமாக, துடிப்பாக, கவனமாக இருக்கவும் உதவும்.
மேலும் அவர்களின் மூளைத் திறன் அதிகரிக்க, சந்தோஷமான மனநிலையில் இருக்க, புதியவற்றை கற்கவும், கற்றவற்றை ஞாபகம் வைக்கவும் என அனைத்துக்குமே துாக்கம் மிகவும் முக்கியம்.
குழந்தைகள் கற்ற பதிவுகளை துாக்கத்தில் செயல் நிறுத்தி மனதில் பதிய வைத்து, பின்னர் மன வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது.
கைக்குழந்தைள் 12 - 16 மணி நேரம், குழந்தைகள் 11 - 14 , பள்ளிக்கு முந்திய பருவத்தினருக்கு 10 - 13 மணி நேரம் தூங்க வேண்டும்.
மேலும் பள்ளி குழந்தைகளுக்கு 9 -11 மணி நேரம், இளம் பதின்ம வயதினருக்கு 8 - 10 மணி நேரம் துாக்கம் தேவை.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஆரோக்கியமான துாக்கப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
துாங்கும் அறையை அமைதியாக, இருட்டாக, குளிர்ந்த நிலையில் வைத்திருப்பது நல்லது. துாங்கும் முன்னர் மூளையைத் துாண்டும் செயல்களை தவிர்க்க வேண்டும்.
தீவிரமான துாக்கமின்மை, இரவில் கால்கள் அதிகமாக உளைவது, குறட்டை விடுதல், உடல் மிகப் பருமன் பிரச்னை இருந்தால் டாக்டரை அணுகுவது நல்லது.