இந்தியாவில் ஹாட் பலூன் ரைடு செல்வதற்கேற்ற சில இடங்கள்
பனிப்படர்ந்த நிலப்பரப்பை ரசிக்க மணாலியில் ஹாட் பலூன் ரைடு செல்வது சிறந்த சாஸ்ஸாக இருக்கும்.
மகாராஷ்டிராவிலுள்ள லோனாவாலாவில் ஹாட் பாலூன் ரைடு செல்லும் போது, உயர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் அழகில் மெய் மறக்கலாம்.
'மகாராஜாக்களின் தேசமான ஜெய்ப்பூரில் அரண்மனையை சுற்றிப் பார்த்தபடி இயற்கை அழகை ரசிப்பது மன்னர் வாழ்க்கைக்கே சென்ற பரவசத்தை அளிக்கும்.
அழகிய தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டையின் அழகை ரசித்துக் கொண்டே ஹாட் பலூன் ரைடு செய்வது இனிமையான அனுபவமாகும்.
கோவாவில் ஹாட் பலூன் ரைடின் போது பிரமிக்க வைக்கும் அரபிக்கடலின் அழகை ரசிப்பது கண்கொள்ளாத காட்சியாகும்.
ஹம்பியில் யுனெஸ்கோ பாரம்பரிய கோயில்கள், வரலாற்று இடிபாடுகளை ரசிக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் டிச., மற்றும் ஜன.,யில் பலூன் திருவிழா நடக்கிறது.
ரிஷிகேஷில் பசுமையான மற்றும் பனி மூடிய மலைகளின் காட்சிகளை பார்க்கும் போது உற்சாகத்துக்கு அளவே இருக்காது.