ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளுக்கு முட்டையை உரிக்க கொடுப்பதால் நிதானம் வரும்!!
மூளை அனுப்பும் சமிக்ஞைகளை, கையும் கண்ணும் ஒரே நேரத்தில் பெற்று, இணைந்து செயல்படுவதற்கு 'பைன் மோட்டார் ஸ்கில்' என்று பெயர். இந்த திறனை குழந்தைகளிடம் மேம்படுத்துவது மிகவும் அவசியம்.
இதற்கு பெற்றோர் செய்ய வேண்டியது, அவித்த முட்டையை குழந்தையிடம் கொடுத்து, அதன் ஓடை உரிக்கச் சொல்வது தான். 1.5 வயதில் இருந்தே இதை செய்ய பழக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவித்த முட்டை சூடு ஆறியதும், லேசாக தட்டி மெல்லிய கீறல் ஏற்பட்டதும், குழந்தையின் கையில் கொடுத்து உரிக்கச் சொல்ல வேண்டும்.
இது போன்ற செயலை செய்யும் போது, குழந்தைக்கு பொறுமை, நிதானம், அமைதி வரும்.
'ஹைபர் ஆக்டிவ்' என்று சொல்லப்படும் துறுதுறுவென்று இருக்கும் குழந்தைகளின் நடவடிக்கையில் நிதானம் வரும்.
முட்டையை உரிக்க ஒரு முறை பழக்கினால் போதும். குழந்தைகள் உற்சாகமாக இதை செய்வார்கள்.
குழந்தையின் கையில் இருக்கும் சிறிய தசைகள், உள்ளங்கை, மணிக்கட்டு, கண்கள் இவை மூளையின் சமிக்ஞையை பெற்று இணைந்து செயல்படும்.
முதன்முறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தை, விரல்களின் நடுவில் பென்சிலை பிடித்து, நோட்டைப் பார்த்து சரியாக எழுத வேண்டும். அதற்கு இந்த பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.