சிப்பிக்காளான் வளர்ப்புக்கு கைகொடுக்கும் டிப்ஸ் இதோ

சிறியளவிலான காளான் குடில் அமைக்க பத்துக்கு பத்தடி அறை போதுமானது; இதில் ஒரே நேரத்தில் 120 படுக்கைகள் அமைக்க முடியும்.

காய்ந்த வைக்கோலை ஒருநாள் முழுவதும் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பாலித்தீன் பையில் வைக்கோலை அடுக்கடுக்காக பரப்ப வேண்டும்.

இதன் நடுவே காளான் விதைகளைத் துாவி பையை மூடி ஆங்காங்கே துளையிட வேண்டும்.

விதைத்த 18வது நாளில் காளான் மொட்டு விடும். 21வது நாளில் விரிந்து அறுவடைக்கு தயாராகி விடும்.

அடுத்தது ஒரு வாரத்தில் ஒரு படுக்கையில் 3 முறை அறுவடை செய்யலாம்.

அதன்பின்னும் பாலித்தீன் பையை மட்டும் அகற்றி படுக்கையை அப்படியே வைத்து அதிலிருந்தும் 10 நாட்களுக்குள் காளான் உற்பத்தியாகும்.

தினமும் 10 படுக்கைகள் வீதம் புதிதாக அமைத்துக் கொண்டே இருந்தால் அறுவடை தொடர்ந்து கிடைக்கும்.

வைக்கோலை ஊற வைப்பது, விதைப்பது என தினமும் காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் வேலை செய்தால் போதும்.

இம்முறையில் தினமும் 4 - 5 கிலோ காளான் கிடைக்கும். குளிர்ச்சியான நாட்களில் அறுவடை அதிகமாக இருக்கும்.

அறுவடைக்கு பின் காளான் படுக்கை சுருங்கி விடும். அப்போது கவரை அகற்றி வெளியே வைத்தால் 10 நாட்களுக்குள் ஒரு கிலோ வரை மீண்டும் அறுவடையாகும்.

இதில் கழிவு என்பதே கிடையாது. படுக்கையை காயவைத்து மாடுகளுக்கு தீவனமாக தரலாம்.