வாக்காளர்கள் கவனத்திற்கு : 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்.

இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் »

வரும் ஏப்ரல் 19ம் தேதி துவங்கும், தேர்தல் ஜூன் 1ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் .

தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

புகார்களை தெரிவிக்க 1800-425-6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

94453 94453 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.