உங்கள் கனவுத்தோட்டத்தில் துத்தி செடியை வளர்ப்பது எப்படி?
துத்தி செடியில் பத்து வகைகளுக்கு மேல் உள்ளன. வட்டவடிவமான கூர்முனைக்கொண்ட இலைகளை உடைய, துத்தி செடி தான், நம் பயன்பாட்டுக்கு உகந்தது.
மஞ்சள் நிற பூவுடனும், வட்டவடிவ சக்கரம் போலான காயுடனும் காணப்படும் இச்செடியை, சின்ன தொட்டியில் வளர்க்கலாம்.
இது, கீரை வகையை சார்ந்த மூலிகை இனம்.
இதன் இலை, காம்பு, பட்டை, பூ, காய், வேர் என, எல்லாமே மருந்து தான். லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும்.
ஆனால், நாம் வீட்டில் வளர்த்து அத்தனை பாகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. இதன் கொழுந்து இலைகளை பறித்து மென்று முழுங்கினாலே போதும்.
இச்செடியை வளர்க்க, சிறிதளவு பராமரிப்பே போதுமானது.
எரு உரம் கலந்த மண்தொட்டியில் காய்ந்த இதன் விதைகளை தூவினாலே, ஒரு சில நாட்களில் செடி முளைக்கும். அவ்வப்போது தண்ணீர் ஊற்றி பராமரிக்கலாம்.