குஜராத்தில் மிஸ் பண்ண கூடாத 10 சுற்றுலா தலங்கள்..!

ஆமதாபாத் நகரத்தில் இருந்து மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஆமதாபாத்திலிருந்து சுமார் 320 கி.மீ., தொலைவில் ரான் ஆப் கட்ச் உள்ளது. உப்பு கலந்த களிமண் நிலம் கொண்டது.

கிர் தேசிய பூங்கா, ஆசிய சிங்கங்களுக்கு பெயர் பெற்றது. டிசம்பர் முதல் மார்ச் வரை கிர் வருவதற்கு ஏற்ற காலமாகும்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையான சோம்நாத் கோவில்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சிக்கு உட்பட்ட பழைய நகரமான துவாரகா விளங்குகிறது. அங்குள்ள துவாரகதீஷ் கோவில் வரலாற்று ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் முக்கிய தலமாக விளங்குகிறது.

கெவாடியாவில் உள்ள நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள படேல் சிலை, உலகின் மிக உயரமான சிலை என பெருமைக்குரியதாகும்.

குஜராத்தின் பாவ்நகரில் உள்ள பாலிதானா கோவில் அமைந்துள்ளது. ஜெயின்களின் புனித யாத்திரை நகரமாக அறியப்படும் சைவ நகரமாக விளங்குகிறது.

புஜ் நகரம், நெசவு, கைவினைப்பொருட்கள் மற்றும் அயினா மஹால் எனப்படும் கண்ணாடி மாளிகை, பிராக் மஹால் போன்றவற்றிற்கு புகழ்பெற்றதாகும்.

குஜராத்தில் ஒரே மலை வாசஸ்தலமான சபுதாரா, பசுமையான ஏரிகள், தோட்டங்களுக்கு புகழ்பெற்றது.

வதோதராவில் லக்ஷ்மி விலாஸ் பேலஸ், பரோடா மியூசியம், கீர்த்தி மந்திர் என சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.