உடற்பயிற்சியால் ஆயுள், ஆரோக்கியம் வருமா?
பொதுவாக உடற்பயிற்சி என்பது, பயிற்சிகளை முடித்ததும், வியர்வை வெளியேறி, உடல் முழுவதும் ஒரு புத்துணர்வை உணரச் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சிகள் முடிந்ததும், அடித்து போட்டதைப் போன்று வலியையோ, இறுக்கத்தையோ உணரக் கூடாது. கடினமான பயிற்சிகளை செய்வது எந்த விதத்திலும் உடலுக்கு உதவாது.
இதுவரையிலும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதால், நீண்ட ஆயுள் வாழலாம், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்கு மருத்துவ, அறிவியல்பூர்வமாக எவ்வித ஆதாரமும் இல்லை.
பலரும் உடலுக்கு வேண்டிய தீவிர பயிற்சிகளை செய்து, அதிகபட்ச கலோரிகளை செலவு செய்து விட்டோம் என நினைப்பர். இவர்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பின் உடலில் பல பிரச்னைகள் வரக்கூடும்.
தீவீர உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் எதிர்பாராமல் உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர உடற்பயிற்சி செய்யும் போது, மகாதமனி விரியும். அப்போது கரோனரி ஆர்ட்டரியை அழுத்தும். இதனால் எதிர்பாராத உயிரிழப்பு எற்படுகிறது.
மற்ற நாடுகளைவிட ஆசிய மரபினருக்கு, இதய கோளாறுகள், கரோனரி ஆர்ட்டரியில் அடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.