இணையத்தில் இதையெல்லாம் தேடினால் ஆபத்து..! அலெர்ட்டா இருங்க மக்களே..!
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், இணையத்தில் எந்த பொருள் குறித்து தேடினாலும் தீர்வு கிடைக்குமென இளைய தலைமுறையினரிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.
ஆனால், அரசின் கண்காணிப்புக்குள் உள்ள தலைப்புகள் குறித்து தேடும் போது, நாமாகவே பிரச்னையை விலை கொடுத்து வாங்குகிறோம்.
நாம் கூகுள் போன்ற தளங்களில் தவிர்க்க வேண்டிய தலைப்புகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
வெடிகுண்டு செய்வது எப்படி? பிரஷர் குக்கர் வெடிகுண்டு செய்வது எப்படி? என்றெல்லாம் தேடுவது, போலீசாரின் கண்காணிப்புக்குள் உங்களை தானாக கொண்டு செல்லும்.
குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள், படங்களை தேடுவதும், பகிர்வதும்கண்டறியப்பட்டால், பாலியல் அத்துமீறல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்.
ஆள்கடத்தல், போதைப்பொருள் மற்றும் கடத்தல் குற்றச்செயல்கள் தொடர்பாக தொடர்ச்சியான தேடினால், அவை சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
குற்றச்செயல்கள் போன்றே கருக்கலைப்பு, கருச்சிதைவு எப்படி மேற்கொள்வது?தொடர்பான தேடல்களை இணையத்தில் மேற்கொள்வது ஆபத்தானது.
கூகுள் போன்ற தேடுபொறி உலகத்தை நம் உள்ளங்கைக்குள் சுருக்கி உள்ளது.
நல்லதிலும் சில கெட்டது என்பது போல, சில எதிர்மறை மனிதர்கள் தவறான விஷயங்களுக்கு இணையத்தை பயன்படுத்தவே செய்கின்றனர்.
எனவே, சைபர் கிரைம் மோசடிகள் போன்ற தீமை தரும் தேடல்களில் இருந்து விலகி, விழிப்புடன் இருங்கள்.