அறிவுசார் சொத்துரிமை தினம் இன்று !
எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது.
இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்., 26ல் உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒருவரின் அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
'அறிவுசார் சொத்துரிமை மற்றும் இசை: அறிவுசார் சொத்துரிமையின் துடிப்பை உணருங்கள்' என்பது இந்தாண்டின் மையக்கருத்தாகும்.
நீங்கள் மாணவராகவோ, நிறுவனராகவோ அல்லது கலைஞராகவோ இருந்தாலும் சரி, இந்த உரிமைகளைப் புரிந்துகொள்வது உங்கள் வேலை, முயற்சியை பாதுகாக்க உதவும்.