கோபம் வந்தால் கையில் சிக்குவதை சிலர் தூக்கி எறிவது ஏன்? எப்படி சரி செய்வது?

ஒருசிலர் சில நேரங்களில் தனியாக பேசுவர்; கோபம் வந்தால் கையில் சிக்குவதை தூக்கி எறிவர். இது துவக்க நிலையில் ஏற்பட்டுள்ள மனநோய்.

அடிக்கடி மது அருந்துபவர்களுக்கும், அதற்கு அடிமையானவர்களுக்கும் இந்த நோய் வர சாத்தியமுள்ளது.

இது மாதிரியான மன நிலை உள்ளவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் அன்பு செலுத்த வேண்டும்.

தனியாக எங்கும் அனுப்ப வேண்டாம். அவருக்கு பிடித்த பாடல்களை அடிக்கடி கேட்க செய்யுங்கள்.

மது குடிக்க நினைக்கும் போது பிடித்த உணவுகளை சாப்பிடக் கொடுங்கள்.

இரவில் நன்றாக துாங்க வேண்டும்.

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை தினமும் குறைந்தது 4 பக்கங்களை படிக்கச் சொல்லுங்கள்; வற்புறுத்த வேண்டாம்.

ஒரு வாரம் கண்காணியுங்கள்; கட்டாயம் மாற்றம் ஏற்படும்.