அயோத்தியில் உலா வந்த 80ஸ் ராமாயண நடிகர்கள் !
அயோத்தில் ராமர் கோவில் எழுப்ப வேண்டும் என்பது அனைவரின் கனவாகும்.
நாளை மறுதினம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில், 80ஸ் காலகட்டத்தில் ராமாயண நாடகத்தில் நடித்தவர்கள் அயோத்திக்கு விசிட் செய்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
ராமராக அருண், லஷ்சுமணனாக சுனில் மற்றும் சீதாவாக நடித்த தீபிகா சிக்லியா முக்கிய வீதிகளில் உலா வந்து வழிபட்டனர்.
இதனால், அயோத்தியில் ராமாயண புராணக்கதை கதாபாத்திரங்களை நேரில் கண்டு நெட்டிசன்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
பாரம்பரியமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிற உடைகளில் அயோத்தி தெருக்களில் அவர்கள் நடந்து சென்றனர்.
இந்த புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகி வருகிறது.