பணிவு மிகவும் அவசியம்... கிருபானந்த வாரியார் சிந்தனைகள்!!

ஒருவர் சிறந்த ஆசிரியரை பெற்றுவிட்டால் பிறவிக்கடலை தாண்டி விடலாம்.

இன்பமும், துன்பமும் உனது மனதில் இருந்தே தோன்றுகின்றன.

அடக்கமாகவும் பணிவாகவும் இரு. பணிவு ஒன்றே உன் வாழ்வை உயர்த்தும்.

ஒருவரது மனதின் பண்பை கொண்டு அவர் நல்லவரா, கெட்டவரா என முடிவு செய்.

நல்லவர் நட்பு மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு உச்சி வேளை நிழல் போல சுருங்கும்.

புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.

மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது.