மெல்லிய புருவங்கள் அடர்த்தியாக வளர விருப்பமா?

புருவங்களை அடர்த்தியாக வளர்க்க வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டே நல்ல பலன் காணலாம்.

மெல்லிசான புருவம் உள்ள குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே நல்ல தரமான மை கொண்டு புருவம் வரைந்தால் அதே வடிவத்தில் அழகாக வளரும்.

ஐ ப்ரோ பென்சிலால் இரவில் தூங்கும் முன் விளக்கெண்ணெய் தொட்டு புருவத்தில் வரைந்து கொண்டு தூங்கினால் புருவம் அடர்த்தியாக வளரும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டாக்கி அதை கொண்டு புருவத்தில் மசாஜ் செய்யலாம்.

வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து தினமும் படுப்பதற்கு முன்பு தடவி வரலாம்.

கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வெந்தயம் தடிமனான புருவங்கள் வளர உதவும் ஒரு இயற்கை மூலப்பொருள் ஆகும். அதை ஊறவைத்து பின் மையாக அரைத்து புருவத்தில் தேய்க்கலாம்.