நகச் சொத்தை குணமாக டிப்ஸ்..!
அனைத்து வயதினரும் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று நகச் சொத்தை பிரச்னை.
பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நகங்களை முறையாக பராமரிக்காததே நகச் சொத்தைக்கு காரணமாகும்.
இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும், இல்லையென்றால் பலவித நோய்களுக்கு வழி வகுப்பதுடன், கால் மற்றும் கை விரல்களின் அழகும் கெட்டுவிடும்.
கீழாநெல்லி இலையுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து இரவில் நகச் சொத்தை உள்ள இடத்தில் தடவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் குணமாகும்.
படிகாரத்தைச் சிறிதளவு எடுத்து ஊறவைத்த அரைத்து தூங்குவதற்கு முன்பு நகச் சொத்தை உள்ள இடத்தில் தடவி, வெதுவெதுப்பான தண்ணீர் கழுவினால் குணமாகும்.