இன்று சத்யசாய் பாபா பிறந்த தினம்... அவரின் சிந்தனைகள் சில...

சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.

மக்களுக்குச் சேவை செய்வதை விட பலன் அளிக்கும் சிறந்த பிரார்த்தனை வேறில்லை.

பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.

பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.

கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று பொருள்.

பகலும் இரவும் போல இன்பமும் துன்பமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தே தீரும்.

கன்று வளரும் போதே அதன் கொம்பும் வளர்வது போல செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது.

காரணம் இன்றி கடவுள் எதையும் படைக்கவில்லை. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது.